technology

img

குழந்தைகளுக்கு தனி இன்ஸ்டாகிராம் பக்கம்.... பெரும் அபாயத்தை ஏற்படுத்தும்.... ரத்து செய்ய பேஸ்புக் நிறுவனருக்கு வழக்கறிஞர்கள் கடிதம்....

வாஷிங்டன்:
குழந்தைகளுக்கென தனி இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்குவது அவர்களுக்கு பெரும் அபாயத்தை ஏற்படுத்தும். எனவே இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று  ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஷூக்கர்பர்க்கிற்கு அமெரிக்காவைச் சேர்ந்த சிசிஎஃப்சி வழக்கறிஞர்கள் குழு கடிதம்கடிதம் அனுப்பியுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் 13 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே கணக்கு தொடங்கி, பராமரிக்க முடியும். இந்நிலையில் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்காகத் தனி இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்க ஃபேஸ்புக் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்கு அமெரிக்காவைச் சேர்ந்த சிசிஎஃப்சி எனப்படும் வணிகம் இல்லாத குழந்தைப்பருவத்திற்கான பிரச்சாரம் (Commercial-Free Childhood) என்ற அமைப்பின் வழக்கறிஞர்கள் குழு,ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஷூக்கர்பர்க்கிற்கு கடிதம் எழுதியுள்ளது.woஅந்தக் கடிதத்தில், மதிப்பு மிகுந்த குடும்பங்களின் தகவல்கள் மற்றும் புதிய தலைமுறை இன்ஸ்டாகிராம் பயனர்களின் தகவல்களைச் சேகரிப்பது ஃபேஸ்புக்கிற்கு வேண்டுமானால் நன்மை பயக்கலாம். ஆனால், இளம் குழந்தைகளை ஆபத்தில் தள்ளும்.இளம் பருவத்தினர் தங்களின் தோற்றம் மற்றும் சுய முன்னிலைப்படுத்துதலில் தொடர்ச்சியான கவனம் செலுத்துவது, அவர்களின் தனியுரிமை மற்றும் வாழ்க்கைக்குச் சவாலாக இருக்கும்.மிகுந்த அபாயத்தை ஏற்படுத்தும்.இதனால் இந்தத் திட்டத்தை மார்க்ஷூக்கர்பர்க் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.இக்கடிதத்திற்கு  ஃபேஸ்புக் நிறுவனம் தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

;